சொந்தமாக வீடு வாங்குவது என்பது கண்டிப்பாக பெரும்பாலான நபர்களின் கனவாக இருக்கிறது. அதற்கான ஹோம் லோனில் சிக்கிக்கொள்ளலாமல் எவ்வளவு டவுன் பேமெண்டை ரெடியாக வைத்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சொந்த வீடு வாங்குவது என்பது பெரும்பாலானவர்களின் ஆசைப் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். ஆனால் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சொந்த வீடு கனவை நினைவாக்கிக் கொள்வது பலருக்கு கடினமான காரியமாக அமைகிறது.
பெரிய தொகையை ஒரே நேரத்தில் புரட்ட முடியாத குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு ஹோம் லோனை நாடுகின்றனர். எனினும், ஹோம் லோன் வாங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்டாக வைத்திருப்பது வீட்டிற்கான செலவை பல மடங்கு குறைப்பதற்கு உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சொத்து மதிப்பில் 80 சதவீதத்தை ஹோம் லோன் ஆக பெறுவதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதிக்கிறது. இது கிட்டத்தட்ட ரூபாய் 30 லட்சத்துக்கு மேல் இருக்கும், மீதம் இருக்கக்கூடிய 20 சதவீத பணத்தை வீடு வாங்குவோர் சொந்தமாக புரட்டிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் மிகக் குறைந்த டவுன் பேமெண்டை செலுத்தி இருக்கும் பட்சத்தில், ஒரு வேலை நீங்கள் உங்கள் சொத்தை விற்பனை செய்ய நினைக்கும் பொழுது, உங்களது ஒட்டுமொத்த லோன் பேலன்ஸ் சொத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் நீங்கள் அந்த வீட்டை விற்பனை செய்ய முடியாது. எனவே அதிக டவுன் பேமெண்ட் வைத்திருப்பது தேவையற்ற நிதி சிக்கல்களை தவிர்க்க உதவும். நீங்கள் எவ்வளவு அதிகமாக டவுன் பேமெண்ட் செலுத்துகிறீர்களோ சொத்து வாங்குவதற்கான விலை அவ்வளவு குறையும். உங்களால் முடிந்த அதிகபட்ச டவுன் பேமெண்ட் தொகையை செலுத்தி விட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வட்டி குறைந்து விடும்.
உதாரணத்திற்கு சொல்லப்போனால், 36 மாத கூடுதல் EMI தொகையை நீங்கள் டவுன் பேமெண்டின் போது முன்கூட்டியே செலுத்தி விட்டால் உங்களது லோன் காலம் தோராயமாக 203 மாதங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக ஹோம் லோன்கள் பெற்ற முதல் 5 முதல் 7 வருடங்களில் வங்கிகள் வட்டியை ரெக்கவர் செய்து விடுவார்கள். எனவே நீங்கள் 7 வருடங்களுக்குப் பிறகு உங்களது லோனை திருப்பி செலுத்தினாலும் அது அவர்களின் சம்பாத்தியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய தொகையை நீங்கள் டவுன் பேமெண்டாக செலுத்தி விட்டால் உங்களது ஹோம் லோன் விரைவாக அப்ரூவ் ஆகிவிடும். ஒரு குறிப்பிடத்தக்க டவுன் பேமெண்ட் வைத்திருப்பது நிதி சார்ந்த உங்களது ஒழுக்கம் மற்றும் பொறுப்பை பறைசாற்றுவதன் மூலமாக நீங்கள் லோனை கட்டாயமாக திருப்பி செலுத்தி விடுவீர்கள் என்பதற்கான ஒரு நம்பிக்கையை வங்கிகளிடத்தில் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் காரணமாக உங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிலையான வருமானம் பெறக்கூடிய சொத்துகள் போன்றவற்றில் முதலீடு செய்வது ஆகியவை பணத்தை பெருக்கிக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் சிலவற்றாக இருக்கிறது. எனினும், எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன்பும் தகுதி பெற்ற நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். இது தேவையற்ற நிதி அபாயங்களில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க உதவும்.
சேமிப்புகளை அதிகரிக்க குறைந்த கால ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு செல்வது மற்றொரு சிறந்த வழி. இது வழக்கமான சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் பாதுகாப்பான, நிலையான மற்றும் அதே சமயம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.
உங்களது ITR-களை ஃபைல் செய்யும் பொழுது வரிகளை சேமிப்பதற்கும் இவை சிறந்த ஆப்ஷனா இருக்கிறது. இந்த திட்டங்களில் நல்ல வட்டி விகிதங்கள் கிடைப்பதோடு, இதில் அரசின் தலையீடு இருப்பதால் இவை பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் கருதப்படுகிறது.