எந்த வயதில் சொந்த வீடு? 12 ராசிக்குமான ஜோதிடம்.


மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை என்றால் அது எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். எல்லோருடைய கனவும், லட்சியமும் அதுவாகத்தான் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் வீடு வாங்குவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. நமது பல வருட உழைப்பை அந்த ஒரு வீட்டிற்கு நாம் தியாகம் செய்யும் நிலையில் இருக்கிறோம். நமக்காக இல்லை என்றாலும் நம் சந்ததியினராவது பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட சொந்த வீடு யோகம் என்பது எந்த எந்த ராசியினருக்கு எந்த வயதில் அமையும் என்பதையும், எந்த கடவுளை வணங்கினால் உங்களுக்கு சொந்த வீடு சீக்கிரம் அமையும் என்பதையும் ஜோதிட ரீதியாக இந்த பதிவில் நாம் இப்போது விரிவாக காணப் போகின்றோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீடு அமைய வேண்டுமென்றால் செவ்வாயும், சுக்கிரனும் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் ஆகும். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தால் சொந்த வீடு அமைவது என்பது கனவாகவே போய்விடும்.

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். உங்களுடைய 42 வயதிற்கு மேல் தான் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும். 42 வயதிற்குள் சொந்த வீடு அமையும் எனில் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தில் தசாபுத்தி மற்றும் பூர்வஜென்ம ஸ்தானமும் பலமாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. 

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். உங்களுடைய ராசி பகவான் அசுரகுரு என்பதால் நீங்கள் சொந்த வீடு வாங்கினாலும் உங்களின் சந்ததியினர் அதனை அனுபவிப்பதற்கு முன்பே அதனை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுடைய 32 வயதிற்கு மேல் சொந்த வீடு அமையும் யோகம் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே சொந்த வீடு வாங்கும் யோகம் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருக்கும். நீங்கள் ஒரு இடத்தில் நிலையாக குடி கொண்டிருக்கும் நிலை இருக்காது. நீங்கள் சோம்பேறி தனமாக இல்லாமல் நல்ல சுறுசுறுப்புடன் செயலாற்றினால் 45 வயதிற்கு மேல் சொந்த வீடு யோகம் உண்டாகும். தாய் மீனாட்சியை வழிபட்டு வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

கடகம்: கடக ராசிக்காரர்கள் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். உங்களுக்கு ஏற்கனவே பூர்வீக சொத்துக்கள் இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் உழைப்பால் நீங்கள் முன்னேறுவீர்கள். 49 வயதில் நீங்கள் முயற்சித்தால் உங்களுக்கு சொந்த வீடு அமையும். எம்பெருமான் ஈசனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வாங்கும் வீடு ஆலயங்களுக்கு அருகில் இருக்குமாறு பார்த்து கொள்வது நல்லது. 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். பிறக்கும்போதே இவர்களுக்கு சொந்த வீடு பாக்கியம் இருக்கும் அல்லது மனைவி வழியில் சொந்த வீடு இருக்கும். உங்களின் அயராத உழைப்பால் 23 வயதில் கூட உங்களால் சொந்த வீடு வாங்க முடியும். அப்படி முடியாத பட்சத்தில் 60 வயதிற்கு மேல் தான் உங்களுக்கு சொந்த வீடு அமையும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். 26 வயதுக்கு மேல் இவர்கள் முயற்சி செய்தால் எப்பொழுது வேண்டுமானாலும் சொந்த வீடு வாங்கும் யோகம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் இவர்களில் கூட்டுக் குடும்பத்தில் இருப்பதையே விரும்புவார்கள். 

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் ஆடம்பர செலவில் தங்களின் உழைப்பை பயன்படுத்தாமல் திட்டமிட்டு செயல்பட்டால் 36 வயதிற்கு மேல் சொந்த வீடு வாங்கி விடலாம். இவர்களுக்கு உதவ இவர்களை சார்ந்தவர்கள் முன்வருவார்கள். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர் 47 வயதிற்கு மேல் முயற்சி செய்தால் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும். பல தடைகளை சந்தித்து தான் நீங்கள் சொந்த வீட்டை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமும் அவரது அண்ணன் விநாயகரை வழிபடுவதன் மூலம் சிறப்பான யோகம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் வாங்கும் வீடு புறநகராக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களின் யோக பலனுக்கு சிறு வயதிலேயே இவர்களுக்கு சொந்த வீடு அமைந்து விடும். இவர்கள் தங்களுடைய வம்சத்தினருக்கு எழுதி வைக்கும் நிலையில் இருப்பார்கள். 

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சொந்த வீடு வாங்கினால் தங்கள் பேரில் வாங்குவது நல்லதல்ல. மனைவி அல்லது பிள்ளைகளின் பெயரில் வாங்கினால் நலம். குரு கொடுக்க சனி கெடுப்பார்.. சனி கொடுக்க யார் கெடுப்பார்? என்ற ஜோதிட பழமொழிக்கேற்ப சனி பகவானே இவருக்கு யோகத்தை வழங்குவார். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கூட்டு குடும்பத்தில் தான் இவர்கள் பெரும்பாலும் இருக்க முடியும். அப்படி இவர்கள் வாங்கினாலும் அதில் இவர்களால் குடியேற முடியாமல் வாடகைக்கு விடும் நிலை உண்டாகலாம் அல்லது தன் சகோதரர்களுடன் பங்குபோட்டு ஒன்றாக இருக்கும் நிலை இருக்கும். 

மீனம்: மீன ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களது சுறுசுறுப்பு இவர்களுக்கு பல யோகங்களை வாரி வழங்கும். எந்த செயலாக இருந்தாலும் அதில் வெற்றி பெறாமல் இவர்கள் ஓய்வு கொள்ள மாட்டார்கள். 22 வயதுக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் இவர்களால் சொந்த வீடு வாங்க முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

Previous Next

نموذج الاتصال