விரைவிலேயே சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய எளிய வழிபாட்டு முறை.


தனக்கென்று சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். சிறிய வீடாக இருந்தாலும் தனக்கென்று சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக பணத்தை சம்பாதித்து சேர்த்து வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்தும் பலரால் தங்களின் கனவு இல்லங்களை கட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும்.

யார் ஒருவருக்கு கிரகலட்சுமிையின் பரிபூரணமான அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் சொந்த வீட்டில் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிரகலட்சுமியை எந்த முறையில் நாம் தினமும் வழிப்பட்டால் விரைவிலயே நம்முடைய கனவு இல்லம் நினைவாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வாடகை வீட்டில் இருப்பவர்களின் கனவாக திகழக்கூடிய சொந்த வீடு விரைவிலேயே அமைவதற்கு கிரகலட்சுமியை வழிபட வேண்டும். முதலாவதாக கிரகலட்சுமி தாயார் அனைத்து இல்லங்களின் நிலை வாசலில் குடியிருப்பவள் ஆவார். அப்படிப்பட்ட கிரகலட்சுமி தாயாரை நாம் வழிபடுவதற்கு தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு நிலை வாசலை தண்ணீர் ஊற்றி கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு அந்த நிலை வாசலை கிரகலட்சுமி ஆக பாவித்து உதிரி பூக்களால் “ஓம் கிரகலட்சுமி நமஹ” என்று அர்ச்சனை செய்ய வேண்டும். இயன்றவர்கள் கிரகலட்சுமியின் புகைப்படத்தை நிலை வாசலுக்கு மேலாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும்.

இவ்வாறு தினமும் நாம் நிலை வாசலை கிரக லட்சுமியாக பாவித்து மஞ்சள் குங்குமம் வைத்து அர்ச்சனை செய்வதன் மூலம் கிரகலட்சுமி அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து கூடிய விரைவிலேயே சொந்த வீடு அமைவதற்கு உரிய வாய்ப்புகள் வந்து சேரும். இதில் நாம் நிலை வாசலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் குங்குமத்தை எக்காரணத்திற்கு கொண்டும் நெற்றியில் வைத்து பூசக்கூடாது. அதை தனியாக தான் வைத்திருக்க வேண்டும்.

இந்த எளிய கிரகலட்சுமி வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் மேற்கொள்ளும் பொழுது கிரகலட்சுமி அருளால் விரைவிலேயே கிரகப்பிரவேசம் நடைபெறும். எந்த அளவுக்கு முழுமனதோடு நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோமோ அந்த அளவுக்கு விரைவிலேயே சொந்த வீடு அமையும்.

Previous Next

نموذج الاتصال