ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணையை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். வாழ்க வளமுடன்
குடும்ப அமைதிக்கு எளிமையான பரிகாரம்
கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை,சச்சரவு,அமைதியின்மை,வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை,எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது. செய்து பயன் அடையுங்கள்.
இதை செவ்வாய்,சனி
தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம்,திசை எதுவும் இல்லை.
(1) ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம்,கையளவு கோதுமை (மாவு அல்ல), கையளவு கல் உப்பு,2 செம்பு நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜையறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும். கட்டி தொங்க விட அவசியமில்லை.மாதம் ஒரு முறை மாற்றி விடலாம்.இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும். குறிப்பிட்டு கணவன் மனைவி சண்டை எனில் மேற்கூறியதில் செம்பு நாணயத்திற்கு பதில் வெள்ளி நாணயம் வைத்து விடவும். பலன் மிகும்.
(2) ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும், அப்படி பட்டவர்கள், ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன் காய்ச்சாத பசும் பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி டம்ப்லரில் (TUMBLER) தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும். பின்பு காலையில் அதை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும்.பாலை மூடாமல் கொண்டு செல்ல வேண்டும். மரம் அருகில் இல்லாதவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் பாலை மாற்றி கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது. இதை வாரா வாரம் செய்து வரலாம். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் மிகும்.
கடன்
பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது
கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான்
இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி
முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன்பெறுவீர்களேயானால்
மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்
(4)
வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில்
அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள்
செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி
இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும்.
அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில்
காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்
வேலையின்மை
வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர தாந்த்ரீக பரிகாரம்
அலுவலகத்தில்
தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள்
தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம்
மிகுந்த பலன் தரும்.நம்பிக்கையுடன் செய்து வரலாம்.இது போன்று பல பரிகார
முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய வழிகள்
மட்டும் தொடராமல் வட நாட்டினர் முறைகளையும் தொடர்ந்து அங்கு
கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்களையும் சோதித்து பின்பு கொடுத்து
வருவதால், பக்தியுடன் செய்வோருக்கு பலன் நிச்சயம் ஏற்படுவதை அனுபவத்தில்
காண்கிறேன்
சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து 1 கிலோ கருப்பு உளுந்து
மற்றும் 1 கிலோ நிலக்கரி இரண்டையும் 1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட
கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து, அதை சாதகர் தலை மற்றும் உடலை 21
முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்) பின்பு அதை ஓடும் நீரில்
(ஆறு,ஏரி,கடல்,நீர் நிலைகள்) விட்டு விட வேண்டும்.பின்பு அங்கேயே நின்று
ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டி கொண்டு வீடு திரும்ப,விரைவில் நல்ல செய்தி
வரும். இதை சனிக்கிழமை காலை 6-7 அல்லது 1-2 செய்ய மிகுந்த பலன் தரும்.
முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு முன்பு செய்து
விட வேண்டும். மற்றபடி இதற்கு மந்திரம்,திசை போன்றவை ஏதும் இல்லை.
வீட்டிலேயே சுற்றி விட்டு பின்பு எடுத்து சென்று நீரில் விடலாம்.
4 முக ருத்திராட்சம் எவர் அணியலாம்?
பொதுவாக
ருத்திராட்சமானது அனைவரும் அணிய வேண்டிய ஒன்று, ஆண் பெண் பேதமில்லை
எப்போதும் கழுத்தில் தரித்திருக்க வேண்டும் என்றே 'ருத்ரக்ஷஜபாலா' உபநிஷது
கூறுகிறது. அதிலும் 4 முக ருத்திராட்சமானது மனத்தெளிவை கொடுக்கவல்லது.
மேலும் அறிவை விருத்தி செய்யும்.இதை அணிந்த குழந்தைகள் நன்றாக
படிப்பார்கள். ஆஸ்துமா, ஞாபக சக்தி குறைவு போன்றவற்றை நீக்கும்.
குழந்தைகள், ஆசிரியர்கள் மேலும் எப்போதும் மனக்கவலை, விரக்தி போன்றவை
உள்ளோர் அவசியம் அணிந்து "ஓம் ஹ்ரீம் நமஹ்" மந்திரத்தை தினசரி 108 முறை
கூறி வர அனைத்திலும் வெற்றி உண்டாகும்.