ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்ல போகிறீர்கள். அந்த காரியத்தில்
வெற்றி அடைய வேண்டும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நுனி
கிழியாத எந்த ஒரு சேதாரம் இல்லாத வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு
வெற்றிலை போதும். அந்த வெற்றிலையை தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள் அல்லது சந்தனத்தை பன்னீரில் குழைத்து ஒரு தீப்பெட்டி குச்சியால்
அந்த சந்தனத்தை தொட்டு வெற்றிலையின் மேலே உங்களுடைய வேண்டுதலை
எழுதவேண்டும்.
உதாரணத்திற்கு இந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும். இந்த வரன் எனக்கு
அமைய வேண்டும். மாணவர்களாக இருந்தால் குறிப்பிட்ட இந்த படிப்புக்கு,
குறிப்பிட்ட இந்த கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும். இந்த காண்ட்ராக்ட்
எனக்கு கிடைக்க வேண்டும். இப்படி உங்களுக்கு எது தேவையோ அந்த விஷயம் சக்ஸஸ்
ஆக சிறிய வரியில் அந்த வெற்றிலையில் எழுதி, சிறிது நேரம் பூஜை அறையில்
வைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார இறைவனை பிரார்த்தனை செய்து
கொள்ளுங்கள். இதற்குள் நீங்கள் எழுதியது காய்ந்துவிடும். 5 நிமிடம் போதும்.
சந்தன குங்குமம் தானே எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிடத்தில் காய்ந்து
விடும்.
இந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி உங்களுடைய
ஹேன்பேக் பர்ஸ் பேக் எதில் வேண்டுமென்றாலும் பத்திரமாக வைத்துக் கொண்டு
எடுத்துச் செல்லுங்கள். மன தைரியத்தோடு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை
எடுங்கள். நிச்சயமாக நீங்கள் சென்ற காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல்
உங்களுக்கு சக்சஸ் ஆகும்.
வீடு வாங்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும். அல்லது வீட்டில் ஏதாவது
ஒரு பொருளை புதியதாக வாங்க வேண்டும். விலைமதிப்பில்லாத பொருள் வாங்க
வேண்டும், என்றாலும் அந்த ஆசையை இந்த வெற்றிலையில் எழுதி அந்த பொருளை
வாங்குவதற்கு முயற்சி செய்யும்போது, இந்த வெற்றிலையை உடன் எடுத்து சென்றால்
அந்த ஆசை கூட சீக்கிரம் நிறைவேறிவிடும்.
வெற்றிலையில் செய்யக்கூடிய பரிகாரம் எப்போதும் வெற்றிலையை தான்
கொடுக்கும். உங்களுடன் வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். மனதில் அந்த
அனுமனை தைரியத்திற்கு கூப்பிடுங்கள். ஒரு துளி கூட மனதில் பயம் இருக்காது.
வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே செல்லலாம். இது ஒரு சின்ன பரிகாரம் தானே.
நீங்கள் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்கள்.