ஒருவருக்கு சொந்தமாக வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகம் அமைய வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் குரு போன்ற கிரகங்கள் வலுவானதாக இருக்க வேண்டும். இந்த கிரகங்கள் எல்லோருக்கும் அப்படி சரியான முறையில் அமைந்து விடுவதில்லை. ஒரு வேளை உங்களுடைய ஜாதகத்தில் இந்த கிரகங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த வழிப்பாடும், பரிகாரமும் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
சொந்த வீடு அமைய கிரக லட்சுமி வழிபாடு
கிரகங்கள் வலுவிழந்த நிலையில் நம்மால் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனாலும் இந்த கிரகலட்சுமி தாயாரின் வழிபாடு நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. கிரகலட்சுமி தாயாரை பூமி மாதா போன்றவர். இவர்கள் நம்முடைய வீட்டில் நிலை வாசலில் வீற்றிருப்பதாக ஐதீகம்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் கிரகலட்சுமி தாயாரை நினைத்து வீட்டு வாசல் படியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வணங்கிய பிறகு தீபம் ஏற்றி வழிபட்டு எங்க வீட்டில் வந்து அமர்ந்து வீடு வாங்கும் யோகத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளும் போது நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இந்த வேண்டுதலை நாம் தினமும் தவறாது செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி வீடு வாங்கும் யோகம் அமைய வேண்டும் என்றால் அங்காரகாரகனின் அருள் வேண்டும். அந்த கிரகத்தின் தெய்வமான முருகப்பெருமானின் வழிபாடும் இதில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை நினைத்து அவரின் திருவுருவ படத்திற்கு சிகப்பு நிற மலர்களால் மாலை தொடுத்து போட்டு, நெய் தீபம் ஏற்றி வீடு வாங்கும் யோகம் அமைய வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கும் போதும் உங்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
இவையெல்லாம் செய்வதுடன் உங்களின் சொந்த வீட்டிற்கு நீங்கள் வைக்க நினைத்திருக்கும் பெயரை ஒரு வெள்ளை நிற தாளில் எழுதி அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த தாள் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கும் முருகப்பெருமான் படத்திற்கும் அருகே இருக்கும் படி வைத்து விடுங்கள். தினமும் காலையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றிய பிறகு பூஜையறையிலும் விளக்கு ஏற்றி இந்த பேப்பரில் எழுதி இருக்கும் உங்கள் சொந்த வீட்டின் பெயரை உரக்க உச்சரித்து இந்த இல்லம் எனக்கு விரைவில் கைகூடி வர வேண்டும் என்று கேட்க வேண்டும். இப்படி நீங்கள் தினம் தினம் இந்த பெயரை சொல்லி நம்பிக்கையுடன் இதை எனக்கு வர வேண்டும் என கேட்டும் பொழுது நிச்சயம் உங்கள் சொந்த வீடு கனவு விரைவில் நிறைவேறும்.
எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு நம்பிக்கையும் முயற்சியும் அவசியம். இந்த வழிபாட்டுடன் உங்கள் சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சியும் சேமிப்பையும் சரியான முறையில் துவங்குங்கள். நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து சேமித்த தொகையில் நிச்சயம் வீடு வாங்குவதற்கான பணியினை மட்டும் செய்யுங்கள். உங்கள் நம்பிக்கையும் வழிபாடும் கைகூடி விரைவில் சொந்த வீட்டில் வாழும் யோகம் விரைவில்