தன் வாழ்நாளில் எப்படியாவது சொந்தமாக ஒரு வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் ஆசையாக இருக்கிறது. காக்கை குருவிகள் கூட தங்களுக்கென்று சொந்தமாக ஒரு கூடு வைத்திருக்கும் போது மனிதனாய் பிறந்தவர்களுக்கு இந்த ஆசை இருப்பது ஒன்றும் தவறில்லை. அந்த கனவு நிஜமாக ஆன்மீகம் ஒரு எளிய தாந்த்ரீக பரிகார முறையை நமக்கு தந்திருக்கிறது. அது என்ன என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த பரிகாரம் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் செய்ய முடியும். ஏனென்றால் இந்த பரிகாரத்தை அந்த நிலத்தில் சென்று தான் செய்ய வேண்டும். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை பூசம் நட்சத்திரம் இருக்கும் நாட்களில் தான் செய்ய வேண்டும். அதிலும் செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம் சேர்ந்து வரும் போது இந்த பரிகாரத்தை தொடங்கினால் மிக மிக விசேஷம். இதை உங்கள் காலண்டரில் பார்த்து அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய பரிகாரம்:
பூசம் நட்சத்திரம் நிறைந்த நாளில் உங்களின் சொந்த நிலத்தில் ஒரே ஒரு வாழை கன்றை நட்டு வைக்க வேண்டும். இந்த வாழை கன்றை பின்னாளில் நீங்கள் வீடு கட்டும் போது எடுக்கக் கூடாது. எனவே அதற்கு தகுந்தார் போல ஓரமாக பார்த்து நட்டு வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த வாழை மரத்தை சுற்றிலும் ஒரு கைப்பிடி பருப்பு (மைசூர் பருப்பு என்று சொல்லப்படும் சிகப்பு பருப்பினை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும்) எடுத்து வாழைக்கன்றை சுற்றி போட்ட பிறகு தண்ணீர் ஊற்றி விட வேண்டும். இவ்வளவு தான் பரிகாரம்.
இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் மட்டும் பூச நட்சத்திர நாளாக பார்த்து தொடங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாரம் தோறும் செவ்வாய்க்கி ழமை அன்று இதை செய்ய வேண்டும். இதே போல் ஏழு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்யும் நாள் அன்று அசைவம் சேர்க்காமல் இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பொறுத்த வரையில் ஏழு வாரம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் இடையில் பரிகாரம் தடைப்பட்டால் மறுபடியும் ஏழு முறை செய்ய வேண்டும். எனவே பெண்களை பொறுத்த வரையில் இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் ஆண்களை வைத்து செய்வது மிகவும் நல்லது.
இந்த பரிகாரத்திற்கு பயன்படும் வாழை மரமானது குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே போல் வீடு வாசல் நிலம் அமைய வேண்டுமென்றால் நமக்கு அங்காரகாரகனின் அருள் தேவை. இந்த பருப்பு அவரின் அருள் பெற்ற பொருளாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டையும் வைத்து செய்யப்படும் இந்த பூஜை நிச்சயம் உங்களுக்கு பலன் அளிக்க கூடியதாக இருக்கும்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்த சிறிது காலத்திற்குள்ளாகவே நிச்சயம் வீடு கட்டுவதற்கான யோகம் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.