அந்த இறைவன் மனது வைத்து விட்டால் போதும் கையில் ஒரு ரூபாய் இல்லாதவன் கூட சீக்கிரமே சொந்த வீடு வாங்கி விடுவான். காசு பணம் இல்லாமல் இந்த கலியுகத்தில் சொந்த வீடு வாங்க முடியாது.
ஆனால் ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பணத்தை கொண்டு வந்து சேர்த்து, சொந்த வீடு வாங்கும் யோகத்தை கொடுக்க கூடிய சக்தி அந்த எம்பெருமானுக்கு உண்டு.
இறைவனையும், கிரகங்களையும் நம் வசப்படுத்திக் கொள்ள சில வழிபாட்டு முறைகளும் சில பரிகாரங்களும் நமக்கு சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து இன்று ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம். சொந்த வீடு வாங்க செய்ய வேண்டிய பரிகாரம்: பொதுவாகவே வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று, செவ்வாய் ஹோரை வரும்போது, வீட்டு வாடகை கொடுத்து வந்தால் சீக்கிரமே சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.
நீங்களும் இதை பின்பற்றுங்கள். இதனோடு சேர்ந்து இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை இரவு 1 சிறிய கிண்ணத்தில் 1 கைப்பிடி அளவு மொச்சை, 1 கைப்பிடி அளவு சர்க்கரை அல்லது வெல்லம், ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.
தண்ணீர் கொஞ்சம் ஊட்டினால் தான் மொச்சை ஊரும். மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை விடிந்ததும் சுத்துபார்த்தமாக குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மொச்சையை கொண்டு போய் ஒரு பசு மாட்டிற்கு சாப்பிட வைக்க வேண்டும்.
6 மணியிலிருந்து 7 மணிக்குள் சென்று பசு மாட்டிற்கு இதை கொடுக்க முடியாது என்பவர்கள் காலை குளித்து முடித்துவிட்டு எந்த நேரம் முடியுமோ அப்போது பசு மாட்டிற்கு இதை கொடுத்து விடுங்கள். பசு மாட்டிற்கு இந்த உணவை கொடுக்கும் போது உங்கள் மனதார சொந்த வீடு வாங்கும் வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கொடுங்க.
அதன் பிறகு வீட்டிற்கு வந்து உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம். செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் நீங்கள் வாடகை பணத்தை கொடுக்கலாம். மாதம் தோறும் இந்த பரிகாரத்தை செய்து வர நிச்சயமாக சொந்த வீடு வாங்கும் யோகத்தை அந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும்.
இந்த பரிகாரத்தை யார் கையால் வேண்டும் என்றாலும் செய்யலாம். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. மாதம் தோறும் ஒரு முறை இதை பின்பற்றினால் கூட போதுமானது தான். உங்களால் முடியும் என்றால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பசு மாட்டிற்கு ஊறவைத்த மொச்சை சர்க்கரை சேர்ந்த கலவையை கொடுக்க முடிந்தாலும் கொடுக்கலாம்.
அது இன்னும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதனோடு சேர்ந்து வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வீட்டிலேயே முருகப்பெருமானை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். முருகப்பெருமானிடம் மனம் உருகி சொந்த வீடு கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக எப்பேர்ப்பட்ட ஏழையாலும் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடியும் என்பது நம்பிக்கை.